மேட்டூரில் பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை.

சேலம் மாவட்டம் மேட்டூரில் பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை நடந்துள்ளது.

Update: 2024-01-27 05:06 GMT

பைல் படம்


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள சாணாரபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (60) குடிநீர் வடிகால் வாரிய காண்ட்ராக்டர். இவரது மனைவி இந்திராணி (55). இவர்களுக்கு வளர்மதி என்ற மகளும், கார்த்திக் என்ற  மகனும் உள்ளனர்.  ஈஸ்வரன் ஒப்பந்த பணி காரணமாக தோரமங்கலம் சென்றார். இந்திராணி வீட்டில் தனியாக இருந்தார். வீட்டில் நான்கு மாடுகள் உள்ளன. மாடுகளுக்கு தீவனம் ஆற்றுவதற்காக உரல் அருகே அமர்ந்துள்ளார். அப்போது யாரோ மர்ம நபர்கள் அவரது தலை மீது ஹாலோ பிரிக்ஸ் கல்லால் பலமாக தாக்கி உள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து அவர் இறந்து போனார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க தாலிக்கொடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. காவலர் இந்த சேலம் எஸ்பி அருண் கபிலன் தலைமையில் வந்த போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர்.

Tags:    

Similar News