மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு 

சுசீந்திரம் அருகே  கம்பியால் மாங்காய் பறிக்க முயன்ற பெண், மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.;

Update: 2024-06-05 13:42 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( 56) அரசு பேருந்து கண்டக்டர். இவரது மனைவி சந்திரா (47).இந்த தம்பதிக்கு ஒரு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்        நேற்று சந்திரா தனது வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் நின்ற மாங்காய் பறிக்க முயன்றுள்ளார். இதற்காக இரும்பு கம்பியை வைத்து மாங்காய்களை பறித்துக் கொண்டிருந்தார். உயரத்தில் உள்ள மாங்காயை பறிக்க முயன்ற போது, சந்திரா நிலை தடுமாறியுள்ளார். இதனால் அருகில் சென்று கொண்டிருந்த மின்கம்பி மீது சந்தரா வைத்திருந்த இரும்பு கம்பி உரசியது.    

Advertisement

  இதையடுத்து இரும்பு கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து சந்திரா தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சந்திராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது சந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆனந்தகுமார் அளித்த புகாரியின் பேரில் சுசீந்திரம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News