பைக் மோதி விபத்தில் பெண் உயிரிழப்பு
இரணியல் அருகே பைக் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன் கோடு பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் (83). இவரது மனைவி அன்னக்கிளி (81) கடந்த 9-ம் தேதி இரவு 7 மணி அளவில் பொருட்கள் வாங்க குந்தன்கோடு சந்திப்புக்கு சென்றுள்ளார். அங்கு மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக அன்னக்கிளி மீது மோதியது. இந்த விபத்தில் அன்னக்கிளிக்கு பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அது போல் பைக்கில் வந்த ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த பீர் முகமது என்பவரும் படுகாயம் அடைந்தார்.
இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அன்னக்கிளி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் வெற்றிவேல் முருகன் (42) என்பவர் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.