திருப்பூரில் ஈச்சர் லாரி மோதி பெண் பலி

திருப்பூர் அருகே ஈச்சேர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பெண் பலி.போலீசார் வழக்கு பதிவு.;

Update: 2024-02-17 05:52 GMT
திருப்பூர் அருகே ஈச்சர் லாரி மோதி பெண் பலி. திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்(48), அவரது மாமியார் லட்சுமி (60) பூண்டி ஆத்துப்பாளையம் பாரதி நகர் பகுதியில் சேர்ந்த லட்சுமி தனது மகள் மற்றும் மருமகனைக்கான ராக்கியாபாளையம் சென்றுள்ளார் பின்னர் மீண்டும் லட்சுமியை பூண்டிக்கு   தனசேகர் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் செல்லாண்டி அம்மன் துணை அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனத்தின் சக்கரம் சரிந்து சாலையோரம் இருந்த குப்பைத் தொட்டியில் மீது  வாகனத்தை மோதியுள்ளார். இதில் நிலை தடுமாறி லட்சுமி சாலையின் நடுவே விழுந்த போது இவர்களுக்கு வலது புறம் சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News