குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சாவு

சேலம் கிச்சிப்பாளையத்தில் குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-08 06:28 GMT

தற்கொலை 

சேலம் கிச்சிப்பாளையம் பாத்திமா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு கிருத்திகா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் சுதர்சன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில், பிரகாஷ் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 21-ந் தேதி பிரகாஷ், ஏன் இறைச்சி சமைக்கவில்லை? என்று கேட்டு கிருத்திகாவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது

. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் கிருத்திகாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கிருத்திகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிருத்திகாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் மற்றும் அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News