பெண் தீக்குளித்து உயிரிழப்பு - போலீசார் விசாரணை

திருமருகல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-15 06:16 GMT

பைல் படம் 

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி ராதிகா (வயது 42).இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் பின்புறம் ஸ்டவ் அடுப்பில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலின் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதனை அறிந்த கார்த்திகேயன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.அங்கு ராதிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராதிகா ஏற்கனவே கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் ராதிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ராதிகாவின் கணவர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News