குளத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாப சாவு
குளத்தூர் அருகே தோட்டத்தில் வேலை செய்தபோது, விஷ பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 11:43 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி சேசு மரியாள் (31). இவர் நேற்று பிற்பகல் அவர்களுக்கு சொந்தமான காட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷ பாம்பு கடித்துள்ளது.
இதில் மயக்கம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.