ப.சிதம்பரத்திடம் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் வாக்குவாதம்

வாக்கு சேகரிக்க சென்ற ப.சிதம்பரத்திடம் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-04 01:39 GMT

வாக்கு சேகரிக்க சென்ற ப.சிதம்பரத்திடம் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உலகம்பட்டி, புழுதிபட்டி, பிரான்மலையில், தனது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பெண்கள் தங்கள் குறைகளை கூறியதால் சலசலப்பு ஏற்பட்டதுசலசலப்பு ஏற்பட்டது. அப்போது அமைதியா இருங்க, நீங்க அமைதியாக இருந்தால் தான் நான் பேசமுடியம் ப.சிதம்பரம் என கூறினார். சரி பேசுங்க என கூட்டத்திலிருந்து குரல் வந்தது. சிரித்து கொண்டே நீங்க பேசுங்கனு சொல்ல வேண்டாம் அமைதியா இருந்தால் போதும் என கூறி சிங்கம்புணரி பகுதியில் கொண்டு வந்த திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது பெண்கள் எங்களுக்கு கோபாலபச்சேரிக்கு பேருந்து வசதி வேண்டும், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை என்றால் ஓட்டு கேட்டு வராதீங்க, எங்களுக்கு ரூ 1000 ம் வேண்டாம், நாங்கள் உழைத்து சம்பாதித்து கொள்வோம் என வாக்கு வாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News