துணிக்கடையில் திருடிய பெண்கள் கைது

தர்மபுரி நகர பேருந்து நிலைய பகுதியில் செயல்படும் துணிக்கடையில் 23 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை திருடிய இரண்டு பெண்களை தர்மபுரி காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-25 03:25 GMT

துணிக்கடையில் திருடிய பெண்கள் கைது

தர்மபுரி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ரெடிமேட் துணிக்கடை ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பெண்கள் துணி எடுக்க வந்தனர். அப்போது கடையில் இருந்த உடைகளை கையில் வைத்திருந்த பையில் எடுத்து போட்டு திருடி உள்ளனர். கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பணியாளர்கள் ஆய்வு செய்தபோது ரெடிமேட் உடைகளை திருடி இருப்பது தெரிய வந்தது. திருடப்பட்ட உடைகளின் மதிப்பு ரூ.23 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தர்மபுரி நகர பி1 காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த 2 பெண்களும் பெங்களூருவைச் சேர்ந்த சுமதி மற்றும் சுஜாதா என்பது தெரியவந்தது. அவர்களை தர்மபுரி பி1 காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும் அவர்கள் வேறு கடைகளில் இதேபோல் திருட்டில் ஈடுபட்டார்களா..? என்பது குறித்து அந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News