திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
வீட்டுமனை பட்டா வழங்ககோரி கோட்டாச்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த டி, குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறி எங்களை ஏமாற்றி வருவதாகவும் எத்தனை முறை முயற்சி எடுத்தாலும் பல்வேறு அரசியல் காரணங்களாக எங்கள் சமுதாய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மறுப்பதாகவும் கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வருவாய் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது,
வருவாய் கோட்டாட்சியர் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களிடம் ஒரு மாத காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்க ஒரு மாத காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிய போது சாமி கையெடுத்து கும்பிடுகிறேன் சாமி ஒரு மாதம் வேண்டவே வேண்டாம் கடந்த 30 ஆண்டுகளாக இதே தான் கூறி வருகிறார்கள் நீங்களும் அதே போன்று தான் கூறுகிறீர்கள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா உடனே வழங்க வேண்டும் எனவும் பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வருவாய் கோட்டாட்சியர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார், பிறகு கண்டிப்பாக உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் நம்பிக்கையுடன் உறுதி அளித்ததால் அங்கிருந்த பெண்கள் கலைந்து சென்றனர், சுமாரா அரை மணி நேரம் வருவாய் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.