மேட்டூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2024-05-03 09:55 GMT

காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில்  20 ஆயிரத்துக்கு மே ற்பட்ட பொதுமக்கள் வாசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீரக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேட்டூர் அணையிலிருந்து தினமும் 7 லட்சம் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சவுரியூர், ஆவடத்தூர், சத்யா நகர் ,கரட்டுப்பட்டி, கட்டி நாயக்கம்பட்டி, ராஜகோபால் தெரு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம்  சீராக வழங்கவில்லை.  தினமும் 7 லட்சம் லிட்டர் குடிநீருக்கு பதிலாக 2.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டது.இதனால் வாரம் ஒருமுறை மட்டுமே பொது மக்களுக்கு குடிநீர் வினியாகம் செய்யப்பட்டதால்  குடிநீர் இன்றி பல்வேறு இன்னல்களை கிராம மக்கள்  சந்தித்து வந்தனர்.

Advertisement

இது குறித்து கிராம மக்கள் சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனை கண்டித்து 50 - கும் மேற்பட்ட பெண்கள் காலி குடகளுடன் ஆவடத்தூரில் பகுதியில்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.   மறியல் காரணமாக ஜலகண்டாபுரம் எடப்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சாலை மறியல் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீரான குடிநீர் வழங்க உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News