மாநகராட்சியை கண்டித்து பெண்கள் நூதன போராட்டம்
மதுரை மாநகராட்சி 24ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சியை கண்டித்து கையில் துடப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள். மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் கனமழையால் மாநகராட்சியின் 80 சதவீத பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் கூட உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் அதன்படி மதுரை மாநகராட்சி 24 வது வார்டுக்கு உட்பட்ட லெனின்தெரு , ஜீவா ரோடு , எம்ஜிஆர் தெரு , ராஜீவ் காந்தி தெரு, பூந்தமல்லி நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு காய்ச்சல் பரவல் ஏற்படுவதோடு, தொற்றுநோய்கள் உருவாகி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இது குறித்து பலமுறை மாநகராட்சிக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை மாநகராட்சியை கண்டித்து கையில் துடப்பத்துடன் ( விளக்கமாறு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்கள் சாலையில் தேங்கியிருந்த கழிவுநீரின் முன்பாக நின்றபடி கையில் விளக்கமாறுடன் மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கும் கழிவுகளால் தொடரும் அவலத்தை பெண்கள் வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது