மகளிர் சுயஉதவி குழு, மருந்தக கட்டிடங்கள் - அமைச்சர் துவக்கி வைப்பு
Update: 2023-12-17 02:49 GMT
கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் சொக்கனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் கால்நடை மருந்தக கட்டிடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் வரலட்சுமி ,திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.