சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா
சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
Update: 2024-03-14 01:41 GMT
சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில், கல்லூரி முதல்வர் அ.அன்புசெழியன் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக ஷோகோ கார்ப்பரேட் நிறுவன தகவல் தொடர்பு மற்றும் மென்திறன் பயிற்சியாளர் சுஜாரிதா சரவணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, பெண்கள் என்றால் வீட்டு வேலைக்கு மட்டுமே பொருத்தமானவர்கள் அல்ல. அவர்கள் சமூக மாற்றத்திற்கானவர்கள் ஆவார்கள். பெண்கள் எதிர்காலத்தில் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டார். விழாவையொட்டி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழா முடிவில் கணிப்பொறித்துறை தலைவர் டி.புவனேஷ்வரி நன்றி கூறினார்.