வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தின விழா

வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-09 15:54 GMT

மகளிர் தின கொண்டத்த்தில் கலந்து கொண்டவர்கள் 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தின விழா மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை வகித்து வட்டார மருத்துவ அலுவலர் அ.கிருஷ்ணஜோதி பேசுகையில், "சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில் பாலின சமத்துவத்தை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நம் முன் இருக்கும் சவால்களைப் பற்றி சிந்திப்பது அவசியம்.

இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை "பெண்களில் முதலீடு செய்யுங்கள் : முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்" என்பதை கருப்பொருளாக தீர்மானித்துள்ளது.

அதாவது சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது என்று கூறினார். விழாவில் மருத்துவ அலுவலர் கிருஷ்ணவேணி தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிராம சுகாதார செவிலியர்கள், தொற்றாநோய் செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள் ஆய்வக நுட்பனர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பெண் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News