அல்அமீன் மேனிலைப்பள்ளியில் புலவர் ஆறுமுகம் தலைமையில் மகளிர் தினவிழா

மதுரை நட்பு தமிழ் வட்டம் சார்பில் கோ.புதூர் அல்அமீன் மேனிலைப்பள்ளியில் புலவர் நாநாஆறுமுகம் தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-06 05:04 GMT

மதுரை நட்பு தமிழ் வட்டம் சார்பில் கோ.புதூர் அல்அமீன் மேனிலைப்பள்ளியில் புலவர் நாநாஆறுமுகம் தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.


மதுரை நட்பு தமிழ் வட்டம் சார்பில் கோ.புதூர் அல்அமீன் மேனிலைப்பள்ளியில் புலவர் நாநாஆறுமுகம் தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. செயலாளர் நாவினிநாசர் வரவேற்புரையாற்றினார். தலைவர் தலைமை உரையில் - நீங்கள் யார் என்னும் அடையாளம் வேறு; நீங்கள் எவ்வகை ஆளுமை என்பதுவேறு; நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுமை மகளிராக ஆகும்போதுதான் நாடு நல்ல நாடாகும்! என்றார்.

அமலகலைச்செல்வி, சுமதி, லதா,சர்மிளா, ஆனந்தவள்ளி, சண்முகப்பிரியா, பொய்யாமொழி, கிருஷ்ணவேனி, ராணியாஸ்மின் ஆகியோருக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் வா.நேரு அவர்கள் மகளிர் விருது வழங்கி கெளரவித்தார். குழந்தைகள் செயசிறீ ,மொழினா, இராசராசேசுவரி, தர்சினி, வினிதாசிறீ, தாரணி, சபரிசா, மகாலெட்சுமி, நிரஞ்சனா உரையாற்றினர். குழந்தைகளுக்கு அல்அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேஷேக்நபி பாராட்டிப் பரிசுகள்வழங்கினார்.

தேசிய திறனறிதேர்வில் சிறப்பு வெற்றிபெற்ற அல்அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுச் தெரிவிக்கப்பட்டது. எழுத்தாளர் குடியாத்தம் ந.தேன்மோழி பேராசிரியர் உ.அனார்கலி ஆகியோருக்கு ஆளுமைமகளிர் சிறப்பு விருதை நட்பு தமிழ் வட்ட தலைவர் புலவர் நாநா.ஆறுமுகம் வழங்கினார். பேராசிரியர் அனார்கலி மகளிர் உரிமை என்பது யாரும் கொடுத்துப் பெறுவதில்லை. தானே வளர்த்துக்கொள்வது என்றார்.

எழுத்தாளர் தேன்மொழி பெண்ணை உடலாய் உடைமையாய்ப் பார்க்கிற சமூகம் மாறவேண்டுமானால் பாலின சமத்துவம் பற்றி பெண்களிடம் பேசுவதை விட்டுவிட்டு நம் வீட்டு ஆண்குழந்தைகளிடமிருந்த முதலில் பேசத்தொடங்குங்கள் என்றார். கவிஞர் மூரா, மருத்துவர் காளிதாசன், மருத்துவர் திலகவதி பாவலர் முருகானந்தம், செல்வகுமரேசன், இளவரசன், வழக்கறிஞர் அறிவானந்தம், தோழர்சு.சா.அன்புமதி, ச.ஆறுமுகம் ஒளிப்படக் கலைஞர் சுந்தரகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

தமிழ்வாசுகி, வாசகர்வட்டம், தமிழியக்கம், சிவகெங்கைத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நிர்மலாதேவி, மகாராணி, சாந்தி, அட்சயா, இராஜ பிரீத்தி, மகாலெட்சுமி, வனிதா, காவ்யா, ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். பொருளாளர் வழக்குரைஞர் மு.ஆசைத்தம்பி நன்றியுரை கூறினார்.

Tags:    

Similar News