புதுகை ஆட்சியரகத்தில் மகளிர் தின விழா!
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மகளிர் தினவிழா நடைபெற்றது.;
Update: 2024-03-09 06:43 GMT
மகளிர் தினவிழா
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மகளிர் தினவிழா நடைபெற்றது. ஆட்சியர் ஐ.சா. மெர்சிரம்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். மேலும், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை லாவண்யா மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யாவிடம் தனது பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சி கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உலக மகளிர் தினத்தை ஆட்சியர் ஐ.சா. மெர்சிரம்யா கொண்டாடினார். நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி- வைகை-குண்டாறு ஆர். ரம்யாதேவி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.