மகளிர் தின விழா : சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கல்

நந்தா கல்வி நிறுவனத்தில் மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2024-03-09 01:20 GMT

நந்தா கல்வி நிறுவனத்தில் மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.


ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தினை முன்னிட்டு 'நந்தாவின் கல்கி 2024' என்ற தலைப்பில் சமூக சேவை, பணிகளில் சிறந்து விளங்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், ஶ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மகப்பேறு மருத்துவர் சுமதி பத்மநாபன் பங்கேற்று விருதுகளை வழங்கினார். இதில், பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சட்ட துணை வழக்கறிஞர் ஸ்ரீதேவி, விளயைாட்டு துறையில் சிலம்ப வீராங்கனை கோமதி, மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் சங்கரேஸ், சட்டத்துறையில் சிறந்து விளங்கும் ராமபிரபா, நகை வடிமைப்பாளர் தலைவர் ஓபுசுஸா செந்தில் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும், நந்தா கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவிகளான மூத்த மருந்தாளுனர் மவுஸ்மி, பிஸியோதெரபிஸ்ட் காவியலட்சுமி, சமூக சுகாதார அமைப்பின் உறுப்பினர் செவிலியர் பவித்ரா, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியின் பொறுப்பு செவிலியர் அபிநயா, சுகாதார ஆய்வாளர் கோபிகா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

முன்னதாக சின்னத்திரை நகைச்சுவை புகழ் மதுரை முத்து பங்கேற்று பேசினார். நந்தா பொறியியல் கல்லூரியின் கணினி துறை தலைவர் வானதி வரவேற்றார். விழாவின் முடிவில் நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் மின்னணு தொடர்பியல் துறை தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன், செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News