ஆதரவற்றோர் இல்லத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது
பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது;
Update: 2024-03-10 13:03 GMT
ஆதரவற்ற முதியோர்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் - அலமேடு - ஆதரவற்ற முதியோர்கள் இலவசக் காப்பகமான பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிபாளையம், அலமேடு பகுதியைச் சார்ந்த செல்வி, அகிலா, மகேஸ்வரி, காவியா ஸ்ரீ மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர். ஆசிரம முதியோர்களுக்கும், வருகை தந்த மகளிர்களுக்கும், கிரீடம் சூட்டி மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஆசிரம முதியோர்களும் & மகளிர்களும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அமைதி தூதர் குருஜி ஷிவாத்மா அவர்களின் ஆலோசனைப்படி இல்ல பொறுப்பாளர்கள் சங்கர், மகேந்திரன், வேணுகோபால், கோகுல், தியாகராஜன் சிறப்பாக செய்திருந்தனர்.