வெள்ளை வர்ண கோடுகள் வரையும் பணி தீவிரம்
விபத்தை தடுக்க வேக தடைகளில் வெள்ளை வர்ண கோடுகள் வரையப்பட்டு வருகிறது
Update: 2023-12-26 10:27 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் இதனால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாக்கினர். இந்நிலையில் பள்ளிபாளையம் காகித ஆலை சாலை குட்டை முக்கு என்ற பகுதியில் உள்ள, வேகத்தடைகளில் இருந்த வெள்ளை வர்ண கோடுகள் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும், அதிக வாகன போக்குவரத்து காரணமாகவும் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில், இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகினர். வளைவு சாலை என்பதால் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டதால், போர்க்கால அடிப்படையில் வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ண கோடுகளை வரையும் வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் காகித ஆலை செல்லும் வழியில் உள்ள பல்வேறு வேகத்தடைகளில் வெள்ளை வண்ண கோடுகளை வரையும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.