வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை அனுப்பும் பணி தீவிரம்

மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதின் போது பயன்படுத்தப்படும் பொருள்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

Update: 2024-03-27 13:47 GMT

மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதின் போது பயன்படுத்தப்படும் பொருள்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதின் போது பயன்படுத்தப்படும் பொருள்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 20}ஆம் தேதி தொடங்கிய நிலையில், புதன்கிழமையுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. விழுப்புரம்(தனி) மக்களவைத் தொகுதியில் திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியிருக் கின்றன

இத்தொகுதிகளில் 1966 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் மறைப்பு அட்டை, பல்வேறு படிவங்கள், பேனா, பென்சில், ரப்பர், குண்டூசி, சீல் வைக்கும் அரக்கு, பேப்பர் சீல், தபால் உறைகள் உள்ளிட்ட 100}க்கும் மேற்பட்ட பொருள்கள் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு அச்சகங்கள் மற்றும் எழுதுபொருள்கள் நிலையங்களிலிருந்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் தேர்தல் பிரிவின் மூலமாக பெறப்பட்டு, கடந்த வாரம் கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துப் பொருள்களும் சரிபார்க்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு மையங்கள் கணக்கிட்டப்பட்டு பிரித்து வைக்கப்பட்டன.

இந்த பணிகள் முடிந்த பின்னர் வாகனங்கள் மூலமாக வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்களை அனுப்பி வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பொருள்கள் வர வர அவை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு அனுப்பி வைத்து வருகிறோம். அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக இந்த பொருள்கள் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்குப்பதிவுக்கு முதல் நாள் அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி காலை முதல் வாக்குச்சாவடி வாரியாக தேவையான எண்ணிக்கையில் அனைத்துப் பொருள்களும் அனுப்பி வைக்கப்படும் என்றனர் தேர்தல் பிரிவு அலுவலர்கள்.

Tags:    

Similar News