புதிய குழாய்கள் மாற்றும் பணி தீவிரம்
திருச்சி குறிஞ்சிபட்டியில் இருந்து புதுக்கோட்டைவரை பதிக்கபப்ட்டுள்ள குடிநீர் குழாய்களை மாற்றி டக்டைல் அயர்ன் காஸ்டிங் குழாய்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Update: 2024-04-07 07:07 GMT
திருச்சி குறிஞ்சி பட்டியில் இருந்து புதுக்கோட்டைக்கு 40 கிலோமீட்டர் தூரம் காவிரி குடிநீர் வரும் குழாய்கள் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளதால் அவ்வப்பொழுது குழாய் உடைந்து சீரான குடிநீர் விநியோகத்திற்கு தடை ஏற்பட்டு வந்த நிலையில் ரூ 75 கோடி செலவில் டக்டைல் அயர்ன் காஸ்டிங் குழாய்களை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. .இந்தப் பணி ஆனது திருச்சி குறிஞ்ச பட்டியில் இருந்து தொடங்கி புதுக்கோட்டை மச்சுவாடி வரை குடிநீர் வினியோகம் தடைபடாத வகையில் நடைபெற்று வருகிறது .இந்த பணி நிறைவு பெறும் பட்சத்தில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படாமல் சீரான வினியோகம் இருக்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் .புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ரூ 2600 கோடி செலவில் குடிநீர் திட்டப்பணிகள் நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ 1550 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.