கம்பி சாலை அமைக்கும் பணி தீவிரம்
கம்பி சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்
Update: 2023-12-21 03:01 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர் ஊராட்சி கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 37.17 இலட்சம் மதிப்பீட்டில் கப்பி சாலை அமைக்கும் பணி, காடாம்புலியூர் ஊராட்சி, கிருஷ்ணா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.