நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் கட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி சுறுசுறுப்படைந்து உள்ளது.

Update: 2024-02-23 04:49 GMT

கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம் 

நடைபெற உள்ள தேர்தல் களம், ஜனநாயக யுத்த களமாக மாறப்போகிறது. இதற்கு பேரணிகளும், பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் பயிற்சி களங்களாக இருக்கப்போகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே முக்கிய கட்சிகள் மாநாடுகளை நடத்தி முடித்து விட்டன.

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வருகிற 27-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. பிரதமரின் வருகையால் தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இதனால் தேர்தல் தொடர்பான பொருட்களின் தேவையும் அதிகரித்து இருக்கிறது.

தேர்தல் பிரசாரம், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி திருமண விழாக்களில் கூட அரசியல் கட்சி தலைவர்கள் வருவதாக இருந்தால் கட்சிக்கொடிகளை நாட்டி தங்கள் கொள்கைப்பற்றை கட்சி தொண்டர்கள் வெளிப்படுத்துவதுண்டு. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது.

இந்தநிலையில் கொடிகளின் தேவை அதிகரித்து இருக்கிறது. இதனால் சேலத்தில் துணியாலான கொடிகள், துண்டுகள், கட்சி கரை வேட்டிகள் தயாரிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக கட்சி சார்ந்த கொடி, கரை வேட்டிகள் உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News