தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.

அருமனை அருகே நோயால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-06-17 03:07 GMT

காவல் நிலையம் 

அருமனை அருகே சிதறால் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி.கூலித்ழிலாளி. இவரது மனைவி யசோதா.இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது. மகன் கல்லூரியில் படித்து வருகிறார். தங்கமணி நீண்ட காலமாக முதுகுவலி,வயிற்று பிரச்னை யால் அவதிப்பட்டு வந்துள்ளார். பலமுறை மருந்து, மாத்திரைகள் சாப்பிட்ட பிறகும் தங்கமணிக்கு உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மன உளைச்சலிலேயே இருந்து வந்துள்ளார்.

Advertisement

இந்தநிலையில் சிதறால் மலைப்பகுதிக்கு சென்ற தங்கமணி திடீரென வாந்தி எடுத்தார்.அந்த வழியாக சென்றவர்கள் விசாரித்த போது, விஷம் குடித்து விட்டதாக கூறினார்.இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் தங்கமணியை மீட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கமணி அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அருமனை போலீசார், தங்கமணியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து யசோதா அளித்த புகாரின் பேரில் அருமனை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News