வீடு புகுந்து மிரட்டிய தனியார் நிதி நிறுவனம் தொழிலாளி தற்கொலை !

கன்னியாகுமரியில் மாதம் கட்ட வேண்டிய கடன் தொகை கட்டாததால் வீடு புகுந்து மிரட்டிய தனியார் நிதி நிறுவன உழியர்கள் மனமுடைந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-02-29 05:52 GMT
தற்கொலை செய்த செல்வன்
கன்னியாகுமரி அருகே உள்ள மந்தாரம் புதூரை சேர்ந்த செல்வன் என்பவரது மனைவி ராதிகா என்பவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருள் து 80 ஆயிரம் ரூபாய் 24 மாத தவணை  கடனாக பெற்றுள்ளார். இந்த மாதம் கட்ட வேண்டிய தொகை   கட்டாததால் வங்கி ஊழியர்கள்  ராதிகாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டி அமர்ந்திருந்தனர். ராதிகா  தன்னுடைய கணவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததை கூறி இருக்கிறார். உடனே வீட்டிற்கு வந்த அவரை வங்கி ஊழியர்கள் மனைவி முன்னிலையில் கேவலமாக பேசியுள்ளார்கள். இதனால் மனமுடைந்த செல்வன்  தன்னுடைய மனைவியிடம் பள்ளிக்கு சென்றுள்ள குழந்தைகளை அழைத்து வர அனுப்பி விட்டு,  தன்னுடைய அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்யும் போது வங்கி ஊழியர்களும் வீட்டின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்துள்ளார்கள். பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்த  அவருடைய மனைவி கணவர் அறையில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து சத்தமிட்டு கதறி உள்ளார். உடனே வீட்டின் உள் அமர்ந்திருந்த வங்கி ஊழியர்கள் நைசாக வெளியேறி ஓடிவிட்டார்கள்.  ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இறந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பிணவறை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி இறந்தவரின் உறவினர் செய்தியாளர்களிடம்  தெரிவிக்கையில் செல்வனின் மரணத்திற்கு காரணமான வங்கி மீதும்  செல்வனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வங்கி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இறந்தவரின் உடலை பெறுவோம் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News