தொழிலாளி தற்கொலை

பேரணாம்பட்டு அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-12 14:44 GMT

தற்கொலை 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே மொரசப்பல்லி - நலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (43), கூலி தொழிலாளி.இவர் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதே கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை திருடியதாக கூறப்படுகிறது.

இதனை சுரேஷ், விவசாயி பிரபாகரன், மற்றும் பண்டு ஆகியோர் பார்த்து, இது குறித்து விசாரிப்பதற்காக ஊர் நாட்டாண்மை கோவிந்தன் என்பவருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் மனமுடைந்த தண்டபாணி அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்று கோழி பண்ணை தீவனத்திற்கு பயன்படுத்தும் மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

Advertisement

உடனடியாக அவரை மீட்டு டி.டி.மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குடி யாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பேரணாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News