மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-06-17 02:52 GMT

மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பக்கிரி முகமது சாய்பு தெருவை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கோபி (47).இவர் நேற்று முன்தினம் இரவு பணி நிமித்தமாக டூ வீலர் குடியாத்தம் செருவங்கி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது குடியாத்தம்- மேல்பட்டி ரோட்டில் சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையின் மறுபக்கத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது குடியாத்தத்தில் இருந்து செம்பேடு கூட்ரோடு முல்லை நகரைச் சேர்ந்த அப்சல் (26) என்பவர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கோபி மீது மோதியது.

Advertisement

இதில் இருவரும் கீழ விழுந்து காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் படுகாயமடைந்த கோபி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபன், அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News