வெள்ளகோவிலில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
வெள்ளகோவில் மூன்றாவது மாடியில் கான்கிரீட் மேற்கூரை போடுவதற்கு சென்ட்ரிங் பலகை அடித்துக் கொண்டிருந்தபோது முருகேசன் கீழே விழுந்து பலியானர்.
வெள்ளகோவில் சேனாதிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவருடைய மனைவி மகாலட்சுமி (43), மகள் நிவேதா (15 ). முருகேசன் கட்டிட சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். காங்கேயம் சாலையில் மு.பழனிச்சாமி நகர் பிரிவில் தனியார் மருத்துவமனை அருகில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் வேலை நடந்து வருகிறது.
இதில் மூன்றாவது மாடியில் கான்கிரீட் மேற்கூரை போடுவதற்காக நேற்று முன்தினம் மாலை சென்ட்ரிங் பலகை அடித்துக் கொண்டிருந்தபோது முருகேசன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டார். இதில் தலை உடல்களில் பலத்த காயமடைந்த அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகுந்த பாதுகாப்பு இல்லாமல் முருகேசனை சென்ட்ரிங் வேலை ஈடுபடுத்தியதால்தான் கணவன் தவறி விழுந்து உயர்ந்ததாகவும், கட்டிட உரிமையாளர், இன்ஜினியர், மேஸ்திரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முருகேசன் மனைவி நேற்று வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,
இந்த புகாரின் பெயரில் வெள்ளகோயில் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.