ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
வந்தவாசி அருகே ஸ்கூட்டரில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-03 16:24 GMT
பலி
விழுப்புரம் மாவட்டம் தாழங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இக்பால் பாஷா (வயது 68). கூலி தொழிலாளி. ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகன் குவைத்தில் வேலை செய்து வருகிறார்.மரக்காணத்தில் இருந்து வந்தவாசியில் உள்ள தர்காவுக்கு செல்வதற்காக இக் பால்பாஷா ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பொன்னூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.