மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

விழுப்புரம் மாவட்டம், மல்லிகைபட்டு கிராமத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-03-11 03:09 GMT

மின்சாரம் தாக்கி பலி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள மல்லிகை பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் ஐசரிவேலன் (வயது 45). தொழிலாளி. இவர், தார் சாலை போடுவதற்கான ஜல்லிகற்கள், தார் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலவை செய்து கொடுக்கும் வகை ஐசரிவேலன் யில் ஒரத்தூரில் இயங்கி வரும் தார் பிளாண்ட்டில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை, அங்கு சென்ற ஐசரிவேலன் சிறு மின் மோட்டாரை இயக்கி, மோட்டார் சைக்கிளை கழுவினார். அப்போது, அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐசரிவேலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News