அறுவடை இயந்திர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலி !
நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி. மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 06:01 GMT
பலி
வாணாபுரம் அடுத்த லா.கூடலுாரைச் சேர்ந்தவர் கேசவன் மகன் சிவா, 30; கூலித் தொழிலாளி. இவரது சித்தப்பா பல்லகச்சேரியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மாரிமுத்து. இருவரும் பைக்கில் நேற்று காலை 9:00 மணியளவில் லா.கூடலுாருக்கு சென்றனர். பைக்கை சிவா ஓட்டினார். கீழத்தேனுார் அருகே சென்ற போது, முன்னால் சென்ற ஸ்கூட்டரை சிவா முந்தியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அதே திசையில் சென்ற நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சிவா இறந்தார். மாரிமுத்து படுகாயமடைந்தார். புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.