பைக் மோதி தொழிலாளி பலி

சாலையில் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2023-12-29 06:10 GMT

பைக் மோதி தொழிலாளி பலி

விராலிமலை திருச்சி செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் வயது (52). புதுக்கோட்டை திருச்சி சாலையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26ம் தேதி இரவு பணி முடிந்து வீட் டுக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற பைக் முரளிதரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பல னின்றி நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு பைக் ஓட்டி வந்த நபரை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News