காட்டெருமை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
பவானி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 08:59 GMT
முதியவர் பலி
பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் சத்தியமங்கலம் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.இன்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டெருமை ஊருக்குள் புகுந்து குமார் என்பவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.