தொழிலாளர்கள் அவதி, நடவடிக்கை எடுக்குமா?:தனியார் நிறுவனம்

தொழிலாளர்கள் அவதி,நடவடிக்கை எடுக்குமா? தனியார் நிறுவனம் என எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2024-04-27 11:29 GMT

திறந்த நிலையில் உள்ள வடிகால் 

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், சிட்கோ தொழிற்பேட்டை கடந்த 1982ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 10,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தொழிற்பேட்டை துவங்கப்பட்ட போது, வடிகால்வாய் வசதியுடன் சாலைகள் போடப்பட்டன.

ஆனால், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆங்காங்கே சாலைகள் சிதிலமடைந்துள்ளன. சில இடங்களில் வடிகால்வாய்கள் துார்ந்துள்ளன. சில இடங்களில் வடிகால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

தெரு விளக்குகளும் இல்லை.இரவுப் பணி முடித்துவிட்டு வீடு திரும்புவோர், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதேபோல், சிட்கோ நுழைவாயில் அருகே தொழிலாளர்களின் வசதிக்காக கட்டப்பட்ட உணவகம், தற்போது பயன்பாடின்றி புதர் மண்டியுள்ளது. அது, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இவ்வாறு, சிட்கோ நிர்வாகம் அடிப்படை பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது. இதனால், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிட்கோ நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News