தொழிற்சங்க அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த தொழிலாளர்கள்
வால்ராசம்பாளையம் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் தங்களுக்கு முறையான கூலி வழங்குவதில்லை என தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிலாளர்கள் தஞ்சம் புகுந்தனர்
Update: 2024-02-07 10:52 GMT
பள்ளிபாளையம் அடுத்துள்ள வால்ராசம்பாளையம் பகுதியில் ,விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்த சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்,விசைத்தறி உரிமையாளர்கள் தங்களுக்கு முறையான கூலி வழங்குவதில்லை எனக்கூறி, காவேரி ஆர்எஸ் சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர் .இன்று மாலை திருச்செங்கோடு டிஎஸ்பியை சந்தித்து தொழிலாளர்கள் மனு வழங்க உள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே வாழ்ராசம்பாளையம் பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, முறையான கூலி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.