கன்னியாகுமரியில் உழைக்கும் பெண் தொழிலாளர்கள் மாநாடு

Update: 2023-11-11 07:57 GMT

பெண் தொழிலாளர்கள் மாநாடு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அகில இந்திய கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடந்தது. அகில இந்திய தலைவர் ஹேமலதா தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில பொருளாளர் ரூபி கொடியேற்றி வைத்தார். இந்த மாநாட்டில் அகில இந்திய பொதுச்செய லாளர் ஜோசப், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

முடிவில் மாநாட்டு வர வேற்பு குழு பொருளாளர் வேலம் நன்றி கூறினார். மாநாட்டில் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது. கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன

Tags:    

Similar News