குரூப்-IV தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

தேனி மாவட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள குரூப்-IV தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-07 12:21 GMT

தேனி மாவட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள குரூப்-IV தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-IV தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள சார்நிலை அலுவலர்களுக்கான தொகுதி-IV தேர்வு வருகின்ற 09.06.2024 ஞாயிற்றுக்கிழமை தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 154 தேர்வு மையங்களில் 40,869 நபர்கள் தேர்வு எழுதவுள்ளார்கள். இத்தேர்வினை கண்காணித்திட வட்டத்திற்கு ஒரு துணை ஆட்சியர் நிலையில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

154 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2044 அறை கண்காணிப்பாளர்கள், 41 இயக்க குழுக்கள், 7 பறக்கும் படை, வீடியோ கிராபர் மொத்தம் 159 நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், தேர்வு மையத்திற்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் காவல்துறை மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வினாத்தாள்கள் வைக்கப்படும் மையங்களுக்கு தீயணைப்பு வாகனங்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வர்கள் தேர்வு எழுதும் மையத்திற்கு வருவதற்கும், தேர்வு முடிந்தப்பின் செல்வதற்கும் போதிய பேருந்து வசதிகள் மாவட்டம் முழுவதும் போக்குவரத்துத்துறையின் மூலம் ஏற்படுத்திதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுத்தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற இத்தேர்வானது ஒளிவுமறைவு அற்ற முறையில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, சிறப்பான முறையில் சுமூகமாக தேர்வை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News