கும்பகோணத்தில் உலக மது ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

கும்பகோணத்தில் உலக மது ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-06-27 14:48 GMT

விழிப்புணர்வு பேரணி

உலக போதை பொருள் ஒழிப்பு தினம் முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் அறிவுருத்தலின்படி, கும்பகோணம் மது விலக்கு அமலாக்க பிரிவு, மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கும்பகோணம் இணைந்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி மகாமக குளக்கரையில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக காந்தி பூங்காவில் முடிவடைந்தது.

இதில் தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு. ப. முருகதாஸ் அவர்கள், கும்பகோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் திருமதி. லூ. கனிமொழி,

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கும்பகோணம் துணை சேர்மன் திரு. வி.ஆ. ரோசரியோ முன்னிலையில், கொடி அசைத்து பேரணி துவங்கப்பட்டது. இதில் கும்பகோணம் அரசு ஆடவர் மற்றும் பெண்கள் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்க மாணவ, மாணவியர்கள்,

மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள், கும்பகோணம் போக்குவரத்து காவலர்கள், அரசு 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 1300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, போதை வஸ்துக்கள்,

கள்ள சாராய குற்றங்கள் பற்றிய புகார்களை தெரிவிக்க, தமிழ் நாடு அரசின் உதவி எண்.10581 மற்றும் வாட்ஸாப் எண். 9042839147 இந்த எண்களை தொடர்பு கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News