உலக ரத்த தான தின விழிப்புணர்வு பேரணி
இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ( மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா., உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார். விபத்து, அறுவை சிகிச்சை போன்ற அவசர கால சூழ்நிலையில் சிகிச்சை பெறுபவருக்கு குருதி தேவை இன்றியமையாததாக உள்ளது.
அந்தவகையில், குருதி கொடை என்பது உயிர்காக்கும் சேவையாக கருதப்படுகிறது. அதன்படி, உலக சுகாதார நிறுவனம் இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக குருதி கொடையாளர் தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மாசௌ.சங்கீதா., உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.
இப்பேரணியில், அரசு செவிலியர் பயிற்ச்சி பள்ளி மாணவியர்கள், தன்னார்வ குருதி கொடையாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில், அரசு இராசாசி மருத்துவனை, முதல்வர் .சி.தர்மராஜ் மாவட்ட சுகாதார அலுவலர் பி.குமரகுருபன், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் .ஆர்.செல்வராஜ், நகர் நல அலுவலர் எஸ்.வினோத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.