டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தின கொண்டாட்டம்
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 16:09 GMT
மரக்கன்று நடல்
தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் நிறுவனத்தின் உதவித்தலைவர் (உற்பத்தி) சுரேஷ் மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
துணை பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் பூமி தினம் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் நிகழும் ஆபத்துகளை பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார். விழாவில் மூத்த அலுவலர்கள்,
தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுற்றுச்சூழல், சிவில் மற்றும் மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.