நாமக்கல் அரசு கல்லூரியில் உலக புவி தின நிகழ்ச்சி!

புவி வடிவில் மனித சங்கிலி அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாணவ மாணவியரும் மனிதன் வாழ தகுந்த இந்த புவியை பராமரித்து பாதுகாக்க வேண்டும், மண்வளத்தை பாதுகாக்க பயிர்,மரம்,செடி,கொடிகள் நன்றாக வளர்ந்து நல்ல காலநிலையை ஏற்படுத்த புவி வெப்பமயமாதலில் இருந்து தடுக்க வீட்டிலும் மற்ற இடங்களிலும் மரங்களை நட வேண்டும்.

Update: 2024-04-22 09:41 GMT

உலக புவி தின நிகழ்ச்சி

நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக புவி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் புவி வடிவில் மனித சங்கிலி அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாணவ மாணவியரும் மனிதன் வாழ தகுந்த இந்த புவியை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றும், மண்வளத்தை பாதுகாக்க பயிர், மரம், செடி, கொடிகள் நன்றாக வளர்ந்து நல்ல காலநிலையை ஏற்படுத்த புவி வெப்பமயமாதலில் இருந்து தடுக்க வீட்டிலும் மற்ற இடங்களிலும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி கூறப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மேலும் துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சார்ந்த துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாவர தாவரவியல் துறை உதவி பேராசிரியரும் கல்லூரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளருமான சந்திரசேகரன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும் விலங்கியல் துறைத் தலைவருமான இராஜசேகரபாண்டியன் மற்றும் தாவரவியல் இணை பேராசிரியரும் பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளருமான வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News