நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு

கருத்தநந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2024-04-27 05:07 GMT

 உலக பூமி தின கருத்தரங்கு

நந்தா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துமனையில் மருத்துவ தாவரவியல் துறையும், நாட்டு நலப்பணித்திட்ட இயக்கமும் இணைந்து உலக பூமி தினத்தினை முன்னிட்டு தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் எஸ்.ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆயுர்வேத கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் எம்.கிருத்திகா வரவேற்றார். கருத்தரங்கின் முதல் நாளில், பாலக்காட்டில் செயல்பட்டு வரும் இந்திய பாராம்பரிய மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் அஜயன் சதானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதன் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் பேசினார். இரண்டாம் நாளில், கேரளாவின் ஆதிவாசி கோத்ரவர்த வம்ஷேய சமிதியின் உறுப்பினர் ஸ்ரீ மல்லன் கனி, ஆராய்ச்சி உதவியாளர் டாக்டர் கே.பவித்ரா ஆகியோர் மருத்துவ குணங்கள் கொண்ட பூக்களின் வகைகள் மற்றும் அதனுடைய முக்கியத்துவங்களை தொகுத்து காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இக்கருத்தரங்கின் முடிவில் டாக்டர் சந்தீப் விஸ்வநாதன் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வெள்ளோடு சரணாலயப் பகுதியில் களப்பணியினை மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.
Tags:    

Similar News