உலக சுற்றுச்சூழல் தின விழா: ஆசிரியர்கள் பங்கேற்புI

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-06 06:04 GMT

உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் 

நாடு முழுவதும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாத்திட உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தியும்,பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தும். சுற்றுச்சூழலை பாதுகாத்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்பிரகாஷ் ராஜன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா முன்னிலை வகித்தார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துணிப்பை வழங்கியும் மரக்கன்றுகள் நடவு செய்து பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் நட்டாத்தி உள்பட 100-க்கு மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.உதவி தலைமையாசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News