உலக உணவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Update: 2023-10-17 06:40 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலக உணவு தினத்தை முன்னிட்டு குமாரபாளையம் புத்தர் வீதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட குடும்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் விடியல் பிரகாஷ், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உணவின் அவசியத்தையும் உணவின் முக்கியத்துவத்தைக் கருதி தமிழக அரசு காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனவும், விவசாயிகளின் நிலையைப் பற்றியும், விவசாயத்தைக் காக்க வேண்டும் எனவும் பேசினார்.

Advertisement

தலைமை ஆசிரியர் S. கிருஷ்ணவேணி ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு இன்றியமையாதது. உணவை வீணாக்கக் கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உண்ணும் உணவை வீணாக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ்விழாவில் ஆசிரியர் விசாலாட்சி, மற்றும் தீனா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News