ஆர்கேஎஸ் கல்லுாரியில் உலக சுகாதார தின விழா

கள்ளகுறிச்சி ஆர்கேஎஸ் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டில் நடைப்பெற்ற உலக சுகாதார தின விழாவில் உடல்நலம் பேணுவது குறித்த அறிவுரை வழங்கப்பட்டது.

Update: 2024-04-20 05:20 GMT

உலக சுகாதார தின விழா

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்கேஎஸ் ஹெல்த் இன்ஸ்டிடியூட் கல்லுாரியில் உலக சுகாதார தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ, இயக்குனர்கள் மனோபாலா, சிஞ்சு, ஆனந்த்ராம், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தனர். மாணவி கரிஷ்மா வரவேற்றார். முதல்வர் சரண்யாதேவி உலக சுகாதார தினம் குறித்து பேசினார்.

அனைவரும் தங்களது உடல் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், குறிப்பாக, ருசிக்கு ஆசைப்பட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான உணவுகளை சாப்பிடக்கூடாது, மேலும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களின் உடல் நலன் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள நீங்கள் முகம் சுழிக்காமல், விருப்பதுடன் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாணவி ஜனனி நன்றி கூறினார்.

Tags:    

Similar News