உலக பட்டினி தினம்: தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2024-05-28 15:08 GMT

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் சார்பாக அன்னதானம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைமை தெரிவித்த நிலையில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள சஷ்டி மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் சார்பாக தமிழக வெற்றிக் கழக மதுரை மாவட்ட பொறுப்பாளர் தங்கப்பாண்டி தலைமையில் திருப்பரங்குன்றம் பொறுப்பாளர் மருது அவர்களின் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

அதேபோல் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி. கல்லுப்பட்டியில் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் சார்பில் தமிழக வெற்றி கழக மதுரை மாவட்ட பொறுப்பாளர் தங்கப்பாண்டி தலைமையில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி தலைவர் டாக்டர் அர்ஜுன் கருப்பையா ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது . இதில் ஏராளமான தமிழக வெற்றிக்கழக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News