உலக தண்ணீர் தினம் !
நாமக்கல் மாவட்டம் அரசு பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 12:07 GMT
உலக தண்ணீர் தினம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. நீர் மேலாண்மையின் அவசியம், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் பற்றி கொண்டாடப்பட்ட இத்தினம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.செ.தங்கவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர்கள் கா.லட்சுமி, ச.விமலா, சி.கவிதா,சு.பிரபு, து.விஜய் ஆகியோர் கலந்துகொண்டு இத்தினத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் பொ.நித்யா,சா.கீதா, நிவேதா மற்றும் பள்ளியின் சாரண இயக்கப் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.