சுண்டலில் புழுக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
ராமநாதபுரத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில், உணவகத்தில் விற்கப்பட்ட சுண்டலில் புழுக்கள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் முகவை சங்கமும் ஆறாவது புத்தக திருவிழா கடந்த இரண்டாம் தேதி துவங்கப்பட்டது. இன்று பத்தாவது நாளில் புத்தக திருவிழாவில் பாரதி நகரை சேர்ந்த சாஹிதா பானு என்ற பெண் புத்தக கண்காட்சியில் பார்த்துவிட்டு புத்தகங்களை வாங்கிய பிறகு அங்குள்ள அறுசுவை உணவகத்தில் விற்கப்பட்ட சுண்டலை இருபது ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளர். அந்த சுண்டலில் புழு இருந்ததை கவனிக்காமல் தின்றதால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த அவர், அச்சமும் வேதனை அடைந்துள்ளார்.
இந்த உணவை சாப்பிட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.உடனே அரசு உணவகத்தை அனுகி புழு இருந்தது பற்றி கேட்டபோது அங்கு சரியாக முறையாக பதில் சொல்லாதால் புத்தகத் திருவிழாவில் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தற்பொழுது புழு இருந்த சுண்டலை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். உணவுத் திருவிழாவில் அமைக்கப்பட்ட உணவகத்தில் வாங்கிய சுண்டலில் புழு இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.