விஜயகாந்த் நலம் பெற தங்கத் தேர் வழிபாடு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு.

Update: 2023-12-02 08:38 GMT

விஜயகாந்த் நலம் பெற தங்கத் தேர் வழிபாடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 18ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கேப்டன் பூரண நலம் பெற்று நலமுடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்டம் தேமுதிக சார்பில் சுகவனேஸ்வரர் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூர்ண நலம் பெற வேண்டி தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தங்கதேர் இழுத்து வழிபாடு செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News